LATEST NEWS
“கதவைத் திறந்து விடுங்க…” உயிர் பயத்தில் இளம்பெண் வெளியிட்ட வீடியோ.. குடும்பத் தகராறில் கணவர் செய்த கொடூரம்..!!
சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, 6 வயது பெண் குழந்தையுடன் அறைக்குள் இருந்த இளம்பெண்ணை அவரது கணவர் வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த அப்பெண், உடனடியாகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது நிலைமையை விளக்கி அப்பெண் எடுத்த வீடியோவைச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானது. இதையடுத்துத் தகவலறிந்த மணலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பூட்டப்பட்டிருந்த அறையின் கதவைத் திறந்து தாயையும் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.
தற்போது மீட்கப்பட்ட தாயும் குழந்தையும் பாதுகாப்பாக உள்ள நிலையில், கதவைப் பூட்டிவிட்டுச் சென்ற கணவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதள வீடியோ மூலம் உடனடியாகச் செயல்பட்டு இருவரையும் மீட்ட காவல்துறையினரின் நடவடிக்கை அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
