BREAKING: முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் பின்னடைவு..! தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் பின்னடைவு..! தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Published

on

சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரும் பிரதான வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, கொடைக்கானலில் உள்ள அரசு நிலத்தைத் தனது சொந்த நிலம் என வேட்புமனுவில் தவறாகக் குறிப்பிட்டதாகவும், சொத்து விவரங்களை மறைத்துத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் கூறி, பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

Advertisement

தினேஷ் தாக்கல் செய்த இந்தத் தேர்தல் வழக்கை ஆரம்பகட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், முதலமைச்சர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in