LATEST NEWS
“நேருவும், காங்கிரஸும் அம்பேத்கரை நம்பவில்லை” – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிரடி அட்டாக்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள கருத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், ஆனால் தமிழகத்தில் அதை எதிர்க்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார். பாஜக SIR மூலமாகத்தான் வெற்றி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், காங்கிரஸின் தோல்விகளுக்கு அக்கட்சியும் அதன் நிர்வாகிகளும்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, தனது தோல்விகளுக்கான காரணமாக SIR மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய கவலை இல்லை என்றும், அவர்களுக்குத் தங்கள் குடும்பத்தைப் பற்றிய கவலை மட்டுமே உள்ளது என்றும் அஷ்வினி வைஷ்ணவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியும், முன்னாள் பிரதமர் நேருவும் டாக்டர் அம்பேத்கரை நம்பவில்லை என்றும், அம்பேத்கரின் அறிவை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
