LATEST NEWS
“இன்று தீபத்தை தடுத்தவர்கள், நாளை கோயிலையே பூட்டிடுவாங்க” மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆவேசம்… பரபரப்பு பேச்சு..!!
திருப்பரங்குன்றத்தில் ஒரு தீபத்தை ஏற்றுவதைத் தடுத்து நிறுத்தலாம். ஆனால், தமிழ் மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உலகம் முழுவதும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒரு தீபத்தைத் தடுத்ததன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இன்று தீபம் ஏற்ற மறுப்பவர்கள், நாளை கோயிலுக்குள் யாரும் செல்லக்கூடாது என்று சொல்வார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதான் மக்களின் விருப்பமா என்றும், இதைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறதா? என்றும் அவர் காட்டமாக வினவியுள்ளார்.
இறுதியாக, இன்று தீபத்தைத் தடுத்து நிறுத்துபவர்கள், நாளை கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்வார்கள் என்றும், அதன்பிறகு நாளை கோயிலையே பூட்டிவிடுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
