“ரேஷன் கடைக்கு இனி நோ என்ட்ரி”.. முதியவர்களுக்கு மட்டுமல்ல இனி இவர்களுக்கும் வீடு தேடி வரும்… டிசம்பர் முதல் 2.27 லட்சம் வீடுகளின் கதவைத் தட்டி வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரேஷன் கடைக்கு இனி நோ என்ட்ரி”.. முதியவர்களுக்கு மட்டுமல்ல இனி இவர்களுக்கும் வீடு தேடி வரும்… டிசம்பர் முதல் 2.27 லட்சம் வீடுகளின் கதவைத் தட்டி வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்…!!

Published

on

தற்போதுள்ள நடைமுறையின்படி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று விரல் ரேகைப் பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால், தனியாக வசிக்கும் முதியவர்கள் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு தொடங்கியது. இதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் சென்று முதியவர்களின் இல்லங்களில் வினியோகம் செய்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் முதல் இதன் பயனாளிகள் வரம்பு விரிவுபடுத்தப்பட்டு, 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கும் நேரடியாகப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 19.30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், சமூகத்தின் பிற பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற பிரிவினருக்கும் இச்சேவையைக் கொண்டு சேர்க்கும் வகையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

அந்த பட்ஜெட் அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, திருநங்கையர், கைம்பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட கூடுதலாக 2.27 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகப் பொருட்களை வழங்கத் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 4.89 லட்சம் மக்கள் நேரடியாகப் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தைத் தடையின்றிச் செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in