70 நாட்கள் மர்மம்.. கோர்ட் வழக்குத் தொடர்ந்ததும் திடீர் மரணம்..? – தவெக எம்.எல்.ஏ V.S. பாபு மரணத்தில் சந்தேகம்.. போலீசில் பரபரப்பு புகார்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

70 நாட்கள் மர்மம்.. கோர்ட் வழக்குத் தொடர்ந்ததும் திடீர் மரணம்..? – தவெக எம்.எல்.ஏ V.S. பாபு மரணத்தில் சந்தேகம்.. போலீசில் பரபரப்பு புகார்..!

Published

on

சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த செப்டம்பர் 9, 2026 அன்று அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. V.S. பாபு, சுமார் 70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆரம்பத்தில் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கைகள் வெளியிட்ட போதிலும், செப்டம்பர் மாத இறுதிக்குப் பிறகு எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படாமல் மௌனம் காத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தொகுதி மக்களிடையே பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.

இதனையடுத்து, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழுத்தரும் சமூக ஆர்வலருமான ஜி. தேவராஜன் என்பவர், எம்.எல்.ஏ-வின் உடல்நிலை குறித்து நவம்பர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், V.S. பாபுவின் உடல்நிலை குறித்துச் சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். மக்கள் பிரதிநிதி ஒருவர் நீண்ட நாட்களாகச் சிகிச்சையில் இருக்கும்போது, தொகுதிப் பணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இந்த வழக்கு நிலுவையில் இருந்த சூழலில்தான், மாரடைப்பு காரணமாக V.S. பாபு நேற்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவரது உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த உடனேயே அவரது மரணச் செய்தி வெளியாகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகத் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in