CRIME
“என் புருஷன்கூட பேசுறது பிடிக்கல..” கணவரின் நட்பால் வந்த ஆத்திரம்.. விமானப் பணிப்பெண்ணைத் தீர்த்துக்கட்ட மனைவி போட்ட பக்கா பிளான்..! விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!
மகாராஷ்டிர மாநிலம் கோந்தியாவில் விமானப் பணிப்பெண் வர்ஷா துர்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தோழரான நிதேஷ் அகர்வாலின் மனைவி மோனா அகர்வால் தான் இந்தக் கொலையைத் திட்டமிட்டு நடத்தியதாகப் போலீஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். தனது கணவருக்கும் வர்ஷாவுக்கும் இடையிலான நெருக்கத்தால் கோபமடைந்த மோனா, வர்ஷாவைக் கொலை செய்வதற்காக ரூ. 13 லட்சம் சுபாரி கொடுத்துள்ளார். புனேவில் வசித்து வந்த வர்ஷா துர்கர் (35), தீபாவளிக்காகக் கயர்லாஞ்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், கடந்த நவம்பர் 14-ஆம் தேதி நிதேஷ் அகர்வாலுடன் கோந்தியாவிலிருந்து திரோடா சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, போந்த்ரானி கிராமத்திற்கு அருகிலுள்ள சிவன் கோயில் அருகே காட்டுப் பகுதியில் மூன்று மர்ம நபர்கள் காரை வழிமறித்து வர்ஷாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
விசாரணையில், மோனா தனக்குத் தெரிந்த குணால் கும்பல்கர் மூலம் ஷாருக் பதானைத் தொடர்பு கொண்டு ரூ. 13 லட்சத்திற்கு இந்தக் கொலையைப் பேசியதும், நிதேஷ் சென்ற கார் மோனா பெயரில் பதிவு செய்யப்பட்டு அதில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் (GPS) கருவி மூலம் மொபைல் செயலி வழியாகக் காரின் இருப்பிடத்தைக் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணித்துத் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மோனா அகர்வால், இம்ரான் ஷேக், ஷாருக் பதான் மற்றும் குணால் கும்பல்கர் ஆகிய நான்கு பேரைக் கோந்தியா உள்ளூர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்; தலைமறைவாக உள்ள நலேன் என்ற நைலான் ஷேக் மற்றும் க்ரிஷ் ராவத் ஆகிய இருவரைத் தேடி வருவதோடு, சுபாரிப் பணப் பரிவர்த்தனை மற்றும் ஒவ்வொருவரின் பங்கு குறித்தும் கோந்தியா எஸ்பி கோரக் பாம்ரே தலைமையிலான ஆறு குழுக்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
