CRIME
இதெல்லாம் ரொம்ப தப்பு..! “தாயுடன் தகாத உறவு” காப்பாற்றுவது போல் நடித்து முதியவரைத் தீர்த்துக்கட்டிய மகன்.. ராணிப்பேட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான கட்டிட மேஸ்திரி சுகுமார், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அறிந்த அப்பெண்ணின் மகன் கவின்குமார், சுகுமாரை எச்சரித்துக் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த சுகுமாரை கவின்குமாரும், வேப்பேரியைச் சேர்ந்த அவரது நண்பர் நிதிஷும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சுகுமாரை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டுப் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக, கொலையில் ஈடுபட்ட கவின்குமாரும் நிதிஷும் மருத்துவமனைக்கு உடன் சென்று நாடகமாடியுள்ளனர். இருப்பினும், அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் உண்மையைக் கண்டறிந்த நெமிலி காவல்துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு இக்கொலையில் தொடர்புடைய மேலும் இரண்டு இளைஞர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உயிரிழந்த சுகுமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
