CRIME
“அடச்சீ இவனெல்லாம் மனுஷனா..?” பாம்பையே ஆயுதமாகப் பயன்படுத்திய சைக்கோ கணவன்.. துடிதுடித்த மனைவி.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த 25 வயதான உத்ரா என்ற இளம்பெண், 2020-ஆம் ஆண்டு தனது கணவரால் பாம்பைக் கடிக்க வைத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த உத்ராவை, வங்கி ஊழியரான சூரஜ் குமார் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது, உத்ராவின் குடும்பத்தினர் புதிய கார் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை வரதட்சணையாகக் கொடுத்தனர். இருப்பினும், மேலும் வரதட்சணை கேட்டு உத்ராவைக் கொடுமைப்படுத்திய சூரஜ், 2020 மார்ச் 2-ஆம் தேதி தனது வீட்டில் வைத்து கண்ணாடி விரியன் பாம்பை விட்டு உத்ராவைக் கடிக்க வைத்தார். இதில் படுகாயமடைந்த உத்ரா, திருவல்லாவில் உள்ள மருத்துவமனையில் 56 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். பின்னர் ஓய்வெடுப்பதற்காக அஞ்சலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, 2020 மே 6-ஆம் தேதி இரவு அங்கு தங்கியிருந்த சூரஜ், சுரேஷ் என்ற பாம்பாட்டியிடம் இருந்து வாங்கி வந்த கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பை உறங்கிக் கொண்டிருந்த உத்ராவின் மீது விட்டு கடிக்க வைத்தார். மறுநாள் காலை உத்ரா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மகளின் மரணம் விபத்தல்ல எனச் சந்தேகித்த உத்ராவின் பெற்றோர், சூரஜ் வரதட்சணைக் கொடுமை செய்ததையும், சொத்துக்களை அபகரிக்க முயன்றதையும் குறிப்பிட்டு காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சூரஜின் செல்போன் அழைப்புகளில் பாம்பாட்டிகளுடன் தொடர்பு இருந்ததும், இணையத்தில் பாம்புகள் குறித்த வீடியோக்களை அவர் பார்த்ததும் உறுதி செய்யப்பட்டது; மேலும் பாம்பாட்டி சுரேஷும் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கை விசாரித்த கொல்லம் நீதிமன்றம், 2021 அக்டோபர் 13-ஆம் தேதி சூரஜ் குமாரைக் குற்றவாளி என அறிவித்ததுடன், விஷம் வைத்தல் மற்றும் ஆதாரங்களை அழித்ததற்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதனைத் தொடர்ந்து இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியாவிலேயே பாம்பை ஆயுதமாகப் பயன்படுத்தி கொலை செய்ததற்காக ஒருவர் தண்டிக்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். இருப்பினும், இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய உத்ராவின் தாயார் மணிமேகலை, “இந்தத் தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தி இல்லை; சட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகள்தான் சமூகத்தில் குற்றவாளிகளை உருவாக்குகின்றன” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
