பெரும் பரபரப்பு..! ஜெம் வீரமணி வீட்டில் புதைக்கப்பட்ட சடலங்கள்..? JCB இயந்திரம் மூலம் வீட்டைத் தோண்டி ஆய்வு.. SIT தீவிர சோதனை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு..! ஜெம் வீரமணி வீட்டில் புதைக்கப்பட்ட சடலங்கள்..? JCB இயந்திரம் மூலம் வீட்டைத் தோண்டி ஆய்வு.. SIT தீவிர சோதனை..!!

Published

on

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில் சடலங்கள் ஏதேனும் புதைக்கப்பட்டுள்ளதா என சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட டிரைவர் பாலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராயப்பேட்டையில் அமைந்துள்ள ஜெம் வீரமணியின் வீட்டின் பின்புறத்தில் ஜேசிபி (JCB) இயந்திரம் கொண்டு வரப்பட்டு, பள்ளம் தோண்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டிரைவர் பாலா அளித்த தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த அதிரடி ஆய்வையொட்டி, ஜெம் வீரமணியின் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் ராயப்பேட்டை பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in