“6 முறை கட்டாயக் கருக்கலைப்பு, பல பெண்களுடன் தொடர்பு” – அரசு அதிகாரியின் முகத்திரையைக் கிழித்த 2-வது மனைவி.. சென்னையில் பகீர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“6 முறை கட்டாயக் கருக்கலைப்பு, பல பெண்களுடன் தொடர்பு” – அரசு அதிகாரியின் முகத்திரையைக் கிழித்த 2-வது மனைவி.. சென்னையில் பகீர்..!!

Published

on

சென்னை குன்றத்தூர் அருகே சிறுகளத்தூரைச் சேர்ந்த செவிலியர் ஜெயந்தி, விவாகரத்திற்குப் பின் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு மின்வாரிய அதிகாரி பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 2014-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயர் பதவியில் இருப்பதால் சட்டப்படி இரண்டாவது திருமணம் செய்ய முடியாது எனக் கூறி வாரத்தில் நான்கு நாட்கள் ஜெயந்தியுடன் குடும்பம் நடத்தி வந்த பாண்டிக்கு, வேறு பல பெண்களுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும், பாண்டியுடன் வாழ்ந்த காலகட்டத்தில் தான் 6 முறை கர்ப்பமானதாகவும், ஒவ்வொரு முறையும் இப்போது குழந்தை வேண்டாம் எனக் கூறி வற்புறுத்தி 6 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததால் தனது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கடந்த ஏழு ஆண்டுகளாகக் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Advertisement

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி பாண்டி மீது கடந்த செப்டம்பர் மாதம் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது அந்த வழக்கு சங்கர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கைத் திரும்பப் பெறக் கோரி பல்வேறு நபர்கள் மூலம் தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகக் கூறியுள்ள ஜெயந்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in