LATEST NEWS
BREAKING: எஸ்.பி வேலுமணி ஆதரவாளர்கள் 6 பேர் மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கம்… எடப்பாடி அதிரடி..!!
அ.தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாகும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி, கோவை புறநகர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த 6 நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கோவை புறநகர் மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் எம்.ஆர். சபரி விக்ரம், குறிச்சி பகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ஆர். சுரேஷ்குமார் தாஸ், போத்தனூரைச் சேர்ந்த பி. வேணுகோபால் மற்றும் ஜே. பரத்குமார் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 98-வது வட்டக் கழக முன்னாள் செயலாளர் ஏ. சேகர் மற்றும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜி. பிரபாகரன் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட 6 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுவதாகவும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
