ஆளும் தரப்பு என்பதால் சலுகையா..? விஜய் மீதும் நடவடிக்கை எடுங்க.. அருள் விக்னேஷ் கைதில் ஒளிந்திருக்கும் உண்மையை உடைத்த டி.டி.வி. தினகரன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆளும் தரப்பு என்பதால் சலுகையா..? விஜய் மீதும் நடவடிக்கை எடுங்க.. அருள் விக்னேஷ் கைதில் ஒளிந்திருக்கும் உண்மையை உடைத்த டி.டி.வி. தினகரன்..!!

Published

on

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரை மாநில அரசு கடந்த 4 மாதங்களாகத் திட்டமிட்டு மூடி மறைத்ததாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகார் அளிக்கப்பட்ட உடனேயே உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு காலம் தாழ்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டுக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த பின்னரே, வேறு வழியின்றி அருள் விக்னேஷை அரசு கைது செய்துள்ளதாகவும் டி.டி.வி. தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் தரப்பிற்கு வேண்டப்பட்டவர் என்பதாலேயே சட்ட நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டதாக அவர் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.

Advertisement

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த புகாரை 4 மாதங்களாக மூடி மறைத்து, சட்டத்தை நிலைநாட்டத் தவறிய முதலமைச்சர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in