CRIME
“திருமண வீட்டில் ஆட்டம் போட்ட குடும்பம்”… மாமா வீட்டில் 30 கிலோ வெள்ளி அபேஸ்… பழைய இரும்புக் கடையில் சிக்கிய மருமகன்.. பகீர் தகவல்கள்..!!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனாவுத்தி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் போத்தார் என்பவரது வீட்டில் லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டன. குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்காக தல்சிங் சராய் சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 30 கிலோ வெள்ளி மற்றும் 40 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது சந்தோஷ் போத்தார் தனது மருமகன் ரோகித் குமார் மீது சந்தேகம் தெரிவித்தார். இதையடுத்து ரோகித் குமாரைப் பிடித்து விசாரித்ததில், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இத்திருட்டில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கூட்டாளி பவன் குமார் என்பவரைக் கைது செய்த காவல்துறையினர், சோன்பூரில் உள்ள ரோகித்தின் பழைய இரும்புக் கடையில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் 10.879 கிலோ வெள்ளி, 9.340 கிராம் தங்கம் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், மூன்றாவது கூட்டாளி குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
