“10 ஆண்டுகால தனிமை.. 4 மாத மன அழுத்தம்..” 36 வயது பெண் ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. வீட்டிற்குள் போலீஸ் கைப்பற்றிய அந்த ஒரு கடிதம்.. உருக்கமான பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“10 ஆண்டுகால தனிமை.. 4 மாத மன அழுத்தம்..” 36 வயது பெண் ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. வீட்டிற்குள் போலீஸ் கைப்பற்றிய அந்த ஒரு கடிதம்.. உருக்கமான பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மியாபூர் பகுதியில், தனிமை மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக 36 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜக்டியால் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்துஜா என்கிற துஷாரிகா (36), ஹைதராபாத் மியாபூரில் தங்கியிருந்து ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் நடத்திய சோதனையில் சிந்துஜா எழுதிய தற்கொலைக் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது; அதில் தனது துயரமான முடிவிற்கான காரணத்தை அவர் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றதிலிருந்து தான் தனிமையில் வசித்து வந்ததாகவும், குறிப்பாகக் கடந்த நான்கு மாதங்களாகக் கடுமையான மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனிமையின் வலியும் மன உளைச்சலும் அவரை இத்தகைய விபரீத முடிவுக்குத் தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement

கடந்த நவம்பர் 26-ஆம் தேதி சிந்துஜாவின் நண்பரான ராஜிரெட்டி என்பவர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, நீண்ட நேரமாகியும் அழைப்பு ஏற்கப்படாததால் சந்தேகமடைந்தார். இதனையடுத்து நேரில் சென்று பார்த்தபோது சிந்துஜா உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மியாபூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in