“தாய்ப்பாசத்திற்கு ஈடு உண்டா..?” கன்றை ஏற்றிச் சென்ற பைக்.. விடாமல் பின்னால் ஓடித் துரத்திய தாய்ப்பசு.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தாய்ப்பாசத்திற்கு ஈடு உண்டா..?” கன்றை ஏற்றிச் சென்ற பைக்.. விடாமல் பின்னால் ஓடித் துரத்திய தாய்ப்பசு.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள அபுல் ஃபசல் என்கிளேவ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், ஒரு சிறிய கன்றுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் வாகனத்தின் பின்னால், தாய்ப்பசு சாலையில் வேகமாக ஓடித் துரத்தும் காட்சி இடம்பெற்றிருந்தது. தாய்ப்பசு தனது கன்றைப் பிரிந்து விடாமல் பின்னால் ஓடுவதைக் கண்ட பலரும் நெகிழ்ச்சியடைந்தனர்; சிலர் பைக்கில் சென்றவர்களின் செயல் குறித்து கேள்வி எழுப்பியதோடு, கன்றுக்குட்டி தாயிடமிருந்து பிரிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய தில்லி காவல்துறையினர், கன்றுக்குட்டியின் உரிமையாளர் அளித்த எழுத்துப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். சுமார் மூன்று மாத வயதுடைய அந்தக் கன்றுக்குட்டியால் சரியாக நடக்க முடியாததால், தனது மகன் அதை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், தாய்ப்பசுவும் அவர்களுடன் பின் தொடர்ந்து சென்றதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், தாய்ப்பசுவும் கன்றுக்குட்டியும் பாதுகாப்பாக இருப்பதை அவர் உறுதி செய்ததாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Advertisement

இருப்பினும், வைரல் காணொளியில் காணப்படும் காட்சிகளுக்கும் உரிமையாளரின் விளக்கத்திற்கும் இடையே உண்மை நிலையை முழுமையாக உறுதிப்படுத்த, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முழுமையான தகவல்கள் தெரிய வரும் வரை வதந்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வத் தகவல்களைச் சரிபார்த்த பிறகே பகிர வேண்டும் என்றும் தில்லி காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in