LATEST NEWS
“அன்றே காங்கிரஸை துவைத்துத் தூரப் போட்டிருப்பேன்..!” திமுக – காங்கிரஸ் கூட்டணியை விளாசித் தள்ளிய சீமான்.. அம்பாசமுத்திரம் மேடையில் அனல் பறந்த பேச்சு..!!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இன்று வரை நிலைத்திருப்பதற்குத் திமுகவின் ஆதரவுதான் முக்கியக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேடையில் உரையாற்றிய சீமான், “திமுகவால் வந்த வினைதான் இது; இல்லை என்றால் அன்றே காங்கிரஸை துவைத்து தூர போட்டிருப்பேன்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சியைத் திமுகதான் தனது தோளில் தூக்கிச் சுமந்து காப்பாற்றியதாகவும், இல்லையெனில் அக்கட்சி எப்போதோ காணாமல் போயிருக்கும் என்றும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். பணபலத்தையும் அதிகார பலத்தையும் தாண்டி, இன எழுச்சியின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று வெல்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் தனது உரையில் சூளுரைத்தார்.
