பெரும் பரபரப்பு..! “ஒரு மெசேஜ் தானே பண்ணாரு, கொலைக் குத்தமா பண்ணிட்டாரு?” இதுக்கெல்லாம் கைதா..? தவெக MLA விவகாரத்தில் மன்சூர் அலிகான் சர்ச்சைப் பேச்சு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு..! “ஒரு மெசேஜ் தானே பண்ணாரு, கொலைக் குத்தமா பண்ணிட்டாரு?” இதுக்கெல்லாம் கைதா..? தவெக MLA விவகாரத்தில் மன்சூர் அலிகான் சர்ச்சைப் பேச்சு…!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பாணியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தச் சம்பவத்தைச் சாதாரணமாகக் கையாண்டிருக்கலாம் என்ற தொனியில் பேசியுள்ளார்.

அருள் விக்னேஷ் செய்த செயலைக் குறிப்பிட்டுப் பேசிய மன்சூர் அலிகான், “என்ன பண்ணிட்டாரு, மெசேஜ் தானே பண்ணாரு? திரும்பி ஒரு மெசேஜ் அனுப்பி ஒரு மன்னிப்பு கேட்டுட வேண்டியது தானே… கொலைக் குத்தமா பண்ணிட்டாரு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதற்காக இவ்வளவு பெரிய நடவடிக்கை தேவையா என்ற ரீதியில் அவரது இந்தப் பேச்சு அமைந்திருந்தது.

Advertisement

மேலும், இந்த விவகாரத்தில் தனது அணுகுமுறை எப்படி இருந்திருக்கும் என்பதைக் குறிப்பிட்ட அவர், “நானாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி முன்னாடி அவரைத் தோப்புக்கரணம் போடச் சொல்லி மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகானின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in