“ஒரே வீடு, இரண்டு நபர்கள்..” அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் செய்த தில்லாலங்கடி வேலை.. சிக்கியது எப்படி..? பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒரே வீடு, இரண்டு நபர்கள்..” அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் செய்த தில்லாலங்கடி வேலை.. சிக்கியது எப்படி..? பரபரப்பு பின்னணி..!!

Published

on

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விவேக் என்பவரிடம் வீட்டை ஒத்திக்கு விடுவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒத்திக்கு வீடு தேடி வந்த விவேக்கிற்கு, பெரவள்ளூர் பகுதியில் ஒரு வீடு காலியாக இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, வீட்டை ஒத்திக்குத் தருவதாகக் கூறி விவேக்கிடமிருந்து ரூ.6.80 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட வீட்டின் உரிமையாளர்கள், அதே வீட்டை விவேக்கிற்குக் கொடுக்காமல் வேறொரு நபருக்கு அதிக தொகைக்கு ஒத்திக்கு விட்டு ஏமாற்றியுள்ளனர்.

இந்த மோசடி குறித்து விவேக் நேரில் சென்று வீட்டின் உரிமையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, வாங்கிய மொத்தத் தொகையான ரூ.6.80 லட்சத்தில் 4 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த அவர்கள், மீதமுள்ள ரூ.2.80 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் விவேக்கிற்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவேக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த மோசடியில் ஈடுபட்ட நிர்மலா என்ற பெண்ணை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நிர்மலாவின் கணவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in