LATEST NEWS
“பணம் இருந்தும் நிம்மதி இல்லை..” சண்டை போட்டுப் பிரிந்த மனைவி அடுத்த நொடியே.. கட்டுக்கட்டாகப் பணத்தை வைத்து கணவன் செய்த காரியத்தைப் பாருங்க.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலத்தில், மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றதால் மனமுடைந்த கணவன் ஒருவர், கட்டுக்கட்டாக இருந்த பணத்தை இரவு நேரத்தில் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, அவரது மனைவி வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்திற்கும் ஆளான அந்த நபர், தனது ஆத்திரத்தை எல்லாம் வீட்டில் இருந்த பணக்கட்டுகளின் மீது காட்டியுள்ளார்.
இரவு நேரத்தில் கட்டுக்கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளை ஒன்றாகக் குவித்து அவர் தீயிட்டுக் கொளுத்தும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. “அன்பு இல்லாத இடத்தில் பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை” என்ற ரீதியில், தனது வாழ்க்கைத் துணை அருகில் இல்லாதபோது இந்தப் பணம் எதற்கு என்ற விரக்தியில் அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரும் ஒருவேளை உணவிற்கும், பணத்திற்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், குடும்பச் சண்டையால் கட்டுக்கட்டாகப் பணத்தை எரித்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
