₹1 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்..! “சிரிப்புதான் வருது.. கோர்ட்டில் சந்திப்போம்” என திமுக பரந்தாமன் அதிரடி சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

₹1 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்..! “சிரிப்புதான் வருது.. கோர்ட்டில் சந்திப்போம்” என திமுக பரந்தாமன் அதிரடி சவால்..!!

Published

on

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் த.வெ.க. பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா மீது ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ. பரந்தாமனுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 9-ஆம் தேதி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பரந்தாமன் பேசியதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 17-ஆம் தேதி தேதியிட்ட அந்த நோட்டீஸில், பரந்தாமன் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்றுப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் மானநஷ்ட ஈடாக ₹1 கோடி வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

Advertisement

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸின் நகலை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள பரந்தாமன், பிரச்சினைக்குப் பதில் கூறாமல் நோட்டீஸ் விடுவது மற்றும் வழக்குப் போடுவேன் என மிரட்டுவது தனக்குச் சிரிப்பைத்தான் வரவழைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நோட்டீஸ் அனுப்பி மிரட்டினால் தான் பயந்துவிடுவேன் என்றோ அல்லது செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டேன் என்றோ நினைக்க வேண்டாம் எனச் சாடியுள்ள அவர், மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும், இதுபோன்ற வழக்குகளை வழக்கம்போலத் தாங்கள் நீதிமன்றத்திலேயே சந்தித்துக் கொள்வோம் என்றும் சவால் விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in