“3 நாளா எங்க போனீங்க CM சார்.?” உங்கள தொடர்பு கொள்ளவே முடியலையாமே.. திமுக பரந்தாமன் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“3 நாளா எங்க போனீங்க CM சார்.?” உங்கள தொடர்பு கொள்ளவே முடியலையாமே.. திமுக பரந்தாமன் கேள்வி..!!

Published

on

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தவெக தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 3 நாட்களில் மட்டும் 17 கொலைகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “மாநில முதல்வர் சி. ஜோசப் விஜய் கடந்த மூன்று நாட்களாக செய்தித்தாள்களைப் படித்தாரா?” என அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த விவகாரத்தில் அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோராலேயே முதல்வர் விஜய்யைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக அரசுக்கு எதிரான விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in