இரவோடு இரவாக அதிரடி..! முக்கிய புள்ளியை தூக்கிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்… தவெகவில் வெடித்த உட்கட்சிப்பூசல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரவோடு இரவாக அதிரடி..! முக்கிய புள்ளியை தூக்கிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்… தவெகவில் வெடித்த உட்கட்சிப்பூசல்…!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்லடம் நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ராமமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் முக்கிய நிர்வாகியான அமைச்சர் என். ஆனந்த் அவர்களின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் மற்றும் திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சங்கர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

Advertisement

இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாக நீக்கப்பட்ட ராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சங்கர் செய்த பல்வேறு தவறுகளை ராமமூர்த்தி கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், அதற்குப் பழிவாங்கும் விதமாகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர்.

ஒருபுறம் தலைமையின் உத்தரவு என நிர்வாகிகள் தரப்பிலும், மறுபுறம் பழிவாங்கும் நடவடிக்கை என ஆதரவாளர்கள் தரப்பிலும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுவதால், பல்லடம் மற்றும் திருப்பூர் மாவட்ட தவெக வட்டாரத்தில் கோஷ்டி மோதல் வெடித்துப் பெரும் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in