“யார் கூட போய்ட்டு வர..?” நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி… 2 குழந்தைகளைத் தவிக்கவிட்டு கணவன் செய்த பயங்கரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“யார் கூட போய்ட்டு வர..?” நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி… 2 குழந்தைகளைத் தவிக்கவிட்டு கணவன் செய்த பயங்கரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் திருக்குமரன் நகர் பகுதியில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கட்டிடத் தொழிலாளியான கணவர், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவருக்கும், பவிலா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப சூழ்நிலைக்காகத் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருவரும் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், வேலைக்குச் சென்று வரும் பவிலாவின் நடத்தையில் கிறிஸ்டோபருக்குச் சந்தேகம் ஏற்பட்டு, “யாரோடு சென்று வருகிறாய்” எனக் கேட்டு தினமும் அவரை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கம் போல நேற்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு, அக்கம் பக்கத்தினர் அவர்களைச் சமாதானம் செய்து வைத்துள்ளனர். பின்னர் அனைவரும் தூங்கச் சென்ற நள்ளிரவு நேரத்தில், ஆத்திரம் அடங்காத கிறிஸ்டோபர், பவிலா ஆழமான தூக்கத்தில் இருந்த தருணத்தைப் பயன்படுத்திக் வீட்டில் இருந்த கனமான அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கிப் போட்டுள்ளார். இதில் பவிலா தல நசுங்கி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீசார், பவிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோட முயன்ற கணவர் கிறிஸ்டோபரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in