CRIME
“அடிப்பாவி நீயெல்லாம் மனுஷியா..?” பேருந்து பயணத்தில் ஏற்பட்ட பழக்கம்… ரூ.18 லட்சம் பணத்திற்காக 23 வயது கணவனைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில், பேருந்து பயணத்தில் ஏற்பட்ட பழக்கத்தால் கள்ளக்காதல் வயப்பட்ட மனைவி, ரூ.18 லட்சம் பணத்திற்காகக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 23 வயது கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகபூப்நகர் மாவட்டம் ஜட்செர்லா மண்டலம் உடந்தாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் (23). இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீசைலத்திற்குப் பேருந்தில் பயணம் செய்தபோது, மல்லிகார்ஜுனுக்கு சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தின் மூலம் மல்லிகார்ஜுன் வீட்டிற்கு வந்து சென்ற சிவாவுக்கும், மல்லிகார்ஜுனின் மனைவி அஞ்சம்மாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, உடந்தாபூர் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் மல்லிகார்ஜுன் குடும்பத்திற்கு ரூ.18 லட்சம் இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது. அந்த ரூ.18 லட்சம் பணத்தை அபகரிக்கத் திட்டமிட்ட அஞ்சம்மாவும் சிவாவும், மல்லிகார்ஜுனைக் கொலை செய்துவிட்டுப் பணத்தைப் பங்கு போட்டுக்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இம்மாதம் 20-ஆம் தேதி இரவு கூலி வேலை இருப்பதாகக் கூறி மல்லிகார்ஜுனை சிவா வெளியே அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற சிவா, மல்லிகார்ஜுனைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியுள்ளார்.
இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டம் மட்குல் மண்டலம் நெமல்லகுட்டா அருகே மல்லிகார்ஜுனின் சடலம் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பணத்திற்காகவும் கள்ளக்காதலுக்காகவும் கணவனைக் கொலை செய்த மனைவி அஞ்சம்மா மற்றும் அவரது கள்ளக்காதலன் சிவா ஆகியோரின் சதித்திட்டம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
