“சடை போடாதது ஒரு குத்தமா..?” 8-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. X-Ray ரிப்போர்ட்டைப் பார்த்து கதறி அழுத தந்தை.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“சடை போடாதது ஒரு குத்தமா..?” 8-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. X-Ray ரிப்போர்ட்டைப் பார்த்து கதறி அழுத தந்தை.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

நாகர்கர்னூல் மாவட்டம் பென்ட்லவெல்லி பகுதியில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி குருகுலப் பள்ளியில் மஞ்சுளா என்பவர் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், பள்ளிக்குத் தலைமுடியைச் சடை பின்னி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மஞ்சுளா, பிளாஸ்டிக் மின்சாரக் குழாயை எடுத்து அந்த மாணவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

ஆசிரியையின் இந்தத் தாக்குதலால் மாணவியின் இரண்டு கைகளிலும் கடுமையான வீக்கம் ஏற்பட்டு, தாங்க முடியாத வலியால் துடித்துள்ளார். இதையடுத்துப் பதறிப்போன மாணவியின் தந்தை, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். அங்கு மாணவியின் கைகளை எக்ஸ்-ரே எடுத்துப் பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு கைகளிலும் உள்ள எலும்புகள் முறிந்து, கைகள் செயல்பட முடியாத நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

Advertisement

கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியையே, சாதாரண காரணத்திற்காக ஒரு மாணவியின் இரண்டு கைகளையும் உடைத்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து அறிந்த மாணவியின் தந்தை மிகுந்த வேதனையும் ஆற்றாமையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in