“இப்படியும் ஒரு திருடனா..? பணம், நகை வேண்டாம்… ஷூ மட்டுமே டார்கெட்..” 40 குடும்பங்களின் ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள காலணிகளை அள்ளிச் சென்ற வினோதத் திருடன்.. பகீர் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இப்படியும் ஒரு திருடனா..? பணம், நகை வேண்டாம்… ஷூ மட்டுமே டார்கெட்..” 40 குடும்பங்களின் ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள காலணிகளை அள்ளிச் சென்ற வினோதத் திருடன்.. பகீர் சிசிடிவி காட்சி..!!

Published

on

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், சுமார் 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணிகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற வினோதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹவுராவின் ஷிப்பூர் பகுதியில் அமைந்துள்ள ‘ஹேப்பி கார்டன் ஹவுசிங் சொசைட்டி’ குடியிருப்பில், கடந்த நவம்பர் 22-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

குடியிருப்பின் சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே குதித்த அந்தத் திருடன், அங்கிருந்த வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த காலணிகளை மட்டுமே குறிவைத்துத் திருடியுள்ளான். இதன் மூலம், அந்தக் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 40 குடும்பங்களுக்குச் சொந்தமான விலையுயர்ந்த காலணிகள் மற்றும் செருப்புகள் மாயமாகியுள்ளன.

Advertisement

திருடிய அனைத்து காலணிகளையும் இரண்டு பெரிய பைகளில் நிரப்பிக்கொண்ட அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். திருட்டுப் போன காலணிகளின் மொத்த மதிப்பு சுமார் 1.20 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், பணம், நகைகளைத் தவிர்த்து காலணிகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வினோதத் திருட்டு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in