“உனக்கு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்கு…” ஒரே ஒரு வார்த்தையால் கொதித்தெழுந்த காதலன்.. இரவு முழுவதும் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கொடூரம்..! பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உனக்கு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்கு…” ஒரே ஒரு வார்த்தையால் கொதித்தெழுந்த காதலன்.. இரவு முழுவதும் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கொடூரம்..! பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகம் மற்றும் தகராறு காரணமாக 27 வயதான ஐ.டி ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹிஞ்சவடியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த கோமல் ராஜேந்திர டஹாகே என்ற இளம்பெண்ணை, அவரது காதலன் சுபம் ஞானேஷ்வர் கால்பாண்டே கொடூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் வர்தா பகுதியைச் சேர்ந்த கோமலுக்கும், பர்பானியைச் சேர்ந்த சுபமுக்கும் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. கோமலுக்கு புனேவில் வேலை கிடைத்ததைத் தொடர்ந்து, இருவரும் ஒரே தனியார் விடுதியில் (PG) வெவ்வேறு அறைகளில் தங்கியிருந்தனர்.

சமீபகாலமாக சுபமுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கோமல் சந்தேகப்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உறவில் விரிசல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கோமலின் அறைக்குச் சென்ற சுபமுக்கும் அவருக்கும் இடையே இதே விவகாரம் தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த சுபம், கோமலைக் கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கியதோடு பலமாகத் தள்ளிவிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் கோமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சுபம் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இரவு முழுவதும் அவரது சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார்.

Advertisement

மறுபுறம், கோமலின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது தாயார், புனேவில் வசிக்கும் தனது சகோதரி மகனை விடுதிக்குச் சென்று பார்க்குமாறு அனுப்பி வைத்தார். திங்கட்கிழமை காலை விடுதிக்குச் சென்ற அவர் கதவைத் தட்டியபோது, சுபம் கதவைத் திறந்துள்ளார்; உள்ளே கோமல் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹிஞ்சவடி காவல்துறையினர், கோமலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதுடன், குற்றவாளியான சுபம் ஞானேஷ்வர் கால்பாண்டேவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in