குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்திலேயே இப்படியொரு கொடூரமா? ரத்தப்போக்குடன் மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்… மருத்துவர்களுக்கே அதிர்ச்சியளித்த பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்திலேயே இப்படியொரு கொடூரமா? ரத்தப்போக்குடன் மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்… மருத்துவர்களுக்கே அதிர்ச்சியளித்த பகீர் உண்மை..!!

Published

on

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அரசு மருத்துவமனைக்கு அதிக ரத்தப்போக்குடன் சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு பிரசவம் நடந்திருப்பதைக் கண்டறிந்தனர். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காகக் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே, அடிமாலி அருகே உள்ள தோக்குப்பாறை சங்குப்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவின் உடல் கிடப்பதாக அடிமாலி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிசுவின் உடலைக் கைப்பற்றி அடிமாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

Advertisement

போலீசாரின் விசாரணையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்தான் அந்தப் பெண் சிசுவின் தாய் என்பதும், திருமணமாகாத நிலையில் குழந்தை பெற்றெடுத்த அவர், பிரசவித்த சில மணி நேரத்திலேயே தோக்குப்பாறை சங்குப்பட்டி அங்கன்வாடி மையச் சுவற்றில் குழந்தையை அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திற்கான பின்னணி குறித்து அடிமாலி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in