மனித மிருகங்களின் வெறிச்செயல்.. 7 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் தலையைத் துண்டித்து, 150 மீட்டர் தள்ளி எரித்த கொடூரம்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்து போன போலீசார்..!! – cinefeeds
Connect with us

CRIME

மனித மிருகங்களின் வெறிச்செயல்.. 7 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் தலையைத் துண்டித்து, 150 மீட்டர் தள்ளி எரித்த கொடூரம்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்து போன போலீசார்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மஜ்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிர்வார் வனப்பகுதியில் அப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், உயிரிழந்த அந்தப் பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்ற நெஞ்சை உறைய வைக்கும் உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், அப்பெண்ணைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அவரது தலையை உடலிலிருந்து துண்டித்துள்ளனர். பின்னர், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகத் துண்டிக்கப்பட்ட தலையை சுமார் 150 மீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்று, அவரது தலைமுடியைத் தீயிட்டு எரித்துள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Advertisement

மேலும், கொலை செய்யப்படுவதற்கு முன்பு அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர். 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிய மஜ்கவான் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in