LATEST NEWS
BREAKING:உள்ளே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ… வெளியே கேட்டுக்குப் பூட்டு.. வெளியான பரபரப்பு தகவல்..!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் வீட்டின் வெளிப்புறக் கேட்டுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் பூட்டு போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஒரு விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ-விடம் விசாரணை நடத்துவதற்காகக் காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.
தற்போது வீட்டிற்குள் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வீட்டின் வெளியே உள்ள கேட்டிற்குப் பூட்டு போடப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எம்.எல்.ஏ கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரவி வரும் சூழலில், இவ்வாறு வீட்டிற்குப் பூட்டு போடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
