LATEST NEWS
“பாலியல் பொறுக்கிகளுக்கு CM விஜய் பாதுகாப்பா..?” உதயநிதி ஸ்டாலின் காட்டமான கேள்வி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாப்பதற்காகத்தான் முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்துகிறாரா?” என உதயநிதி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ள நிலையில், இவ்வளவு நாட்களாக இந்த உண்மையை மறைத்த அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை முதலமைச்சர் உடனடியாகக் கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் இனியும் எவ்விதத் தாமதமும் இன்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
