ஜாமீனில் வெளிய வரவே முடியாது.. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜாமீனில் வெளிய வரவே முடியாது.. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜா அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், பொது நிகழ்ச்சியில் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 75 (பாலியல் துன்புறுத்தல்), 78 (பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல்), மற்றும் 79 (பெண்ணின் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவிக்கும் செய்கை) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளும் உள்ளடங்கும் என்பதால், சட்ட ரீதியாக இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடைய வழக்கு என்பதால், காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்திற்கு மேலான அதிகாரி விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in