LATEST NEWS
“ரத்த பந்தத்தை மிஞ்சிய அன்பு…” 80 வயது மாமியாருக்கு மகளாக மாறி தலைமுடியை மழித்து இறுதி மரியாதை செய்த மாமியார்.. கிராமத்தையே கண்கலங்க வைத்த தருணம்..!!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில், தனது மாமியாருக்குத் தாய்க்குச் செய்வது போலத் தானே முன்னின்று தலைமுடியை மழித்து, இறுதிச் சடங்குகளைச் செய்த மருமகளின் நெகிழ்ச்சியான செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் என்குர் மண்டலம் ஜென்னாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயதான கொங்கூர சாவித்திரம்மா. கணவர் மற்றும் ஒரே மகனையும் இழந்து ஆதரவற்று நின்ற சாவித்திரம்மாவை, அவரது மருமகள் கௌசல்யா பல ஆண்டுகளாகத் தனது கண்மணி போலப் பாதுகாத்து, அனைத்துத் தேவைகளையும் உடனிருந்து கவனித்து வந்தார்.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சாவித்திரம்மா காலமானார். அவரது இறுதிச் சடங்கின்போது, பாரம்பரிய வழக்கப்படி பாட்டியின் தலைமுடியை மழித்து இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய பேரனின் மனைவி கர்ப்பமாக இருந்ததால், சாஸ்திரப்படி அவரால் அந்தச் சடங்குகளைச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, தனது கணவரின் இடத்தில் தானே நின்று, மாமியார் சாவித்திரம்மாவின் தலைமுடியை மழித்து, ஒரு மகளைப் போல அனைத்து இறுதிச் சடங்குகளையும் மருமகள் கௌசல்யா முன்னின்று செய்து முடித்தார். ரத்த பந்தத்தை விட அன்பும், பாசமும், பொறுப்புணர்வுமே மேலானது என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்ட கௌசல்யாவை உறவினர்களும் கிராம மக்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். மாமியார்-மருமகள் உறவுக்கு ஒரு உன்னதமான எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
