பாவம் அந்த மனுஷன்..! “உங்களுக்கு வாக்களித்தவன் என்ற உரிமையில் கேட்கிறேன்…” முதல்வர் விஜய்க்கு தாடி பாலாஜி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாவம் அந்த மனுஷன்..! “உங்களுக்கு வாக்களித்தவன் என்ற உரிமையில் கேட்கிறேன்…” முதல்வர் விஜய்க்கு தாடி பாலாஜி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!

Published

on

கள்ளக்குறிச்சி தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் சிக்கித் தலைமறைவாகியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், நடிகர் தாடி பாலாஜி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சர்ச்சைக்குரிய அந்த எம்.எல்.ஏ-வைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “இது எவ்வளவு பெரிய தவறு… நீங்கள் செய்த செயலால் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்த முதலமைச்சருக்கே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டீர்களே” என அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய தாடி பாலாஜி, முதலமைச்சர் விஜய்யால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுப் பதவிக்கு வந்தவர்கள் அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர, இதுபோலப் பக்கவிளைவுகளாக மாறக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “முதலமைச்சர் விஜய்க்கு வாக்களித்த கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன் என்ற உரிமையில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். இனி வரும் காலங்களில் தேர்தலுக்கான தொகுதி வேட்பாளர்களை மற்றவர்களிடம் விடாமல், உங்களது நேரடி மேற்பார்வையின் கீழ் நம்பிக்கையான நபர்களாக நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட ஆரம்பக் காலகட்டத்தில் அக்கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்த தாடி பாலாஜி, பின்னர் தனக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி விலகியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் தவெக நிர்வாகியான தாடி பாலாஜியின் இந்த வீடியோ பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in