“அடச்சீ.. தந்தையாகப் பார்க்க வேண்டியவரே இப்படியா..?” மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார்.. உண்மையை மறைக்க கணவரும் மாமியாரும் செய்த பகீர் செயல்.. மருத்துவர்களின் சந்தேகத்தால் வெளிச்சத்திற்கு வந்த குடும்ப ரகசியம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ.. தந்தையாகப் பார்க்க வேண்டியவரே இப்படியா..?” மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார்.. உண்மையை மறைக்க கணவரும் மாமியாரும் செய்த பகீர் செயல்.. மருத்துவர்களின் சந்தேகத்தால் வெளிச்சத்திற்கு வந்த குடும்ப ரகசியம்..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆறான்விளை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் அஜிதா, தாயை இழந்து தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர் வடக்கன்பாகம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் செல்வகுமார் (54) என்பவரின் மகனும், டைல்ஸ் தொழிலாளியுமான ஸ்ரீ விக்னேஷ் (25) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். பாட்டியின் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அஜிதா, ஸ்ரீ விக்னேஷைக் கோவிலில் திருமணம் செய்துகொண்டு அவரது கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்துள்ளார்.

மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இரவு காவலாளியாகப் பணியாற்றி வரும் மாமனார் செல்வகுமார், இரவுப் பணி முடிந்து பகலில் வீட்டிற்கு வருவது வழக்கம். வீட்டில் உள்ள மற்றவர்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில், தனியாக இருந்த மருமகள் அஜிதாவை மிரட்டி கடந்த மூன்று மாதங்களாக அவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அஜிதா இரண்டு மாத கர்ப்பமடைந்த நிலையில், இது குறித்துத் தனது கணவர் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் மாமியார் ராஜேஸ்வரியிடம் கூறியுள்ளார். ஆனால், இவ்விவகாரம் வெளியே தெரிந்தால் செல்வகுமார் அவமானத்தில் தற்கொலை செய்துகொள்வார் எனக் கூறி, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என அஜிதாவிடம் சத்தியம் வாங்கி இருவரும் மிரட்டியுள்ளனர்.

Advertisement

கடும் மனவேதனைக்கு ஆளான அஜிதா, கடந்த வெள்ளிக்கிழமை தக்கலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று தனது இரண்டு மாத கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த மருத்துவர்கள் அவரை உள்நோயாளியாக அனுமதித்து மணவாளக்குறிச்சி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாமனார் செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.

அஜிதா அளித்த புகாரின் அடிப்படையில், மாமனார் செல்வகுமார், கணவர் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் மாமியார் ராஜேஸ்வரி ஆகிய மூவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள மூவரையும் கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in