“ஒரு நாள் எல்லோரும் இறந்துதான் ஆக வேண்டும் அதனால்” – டைரியில் உருக்கமாக எழுதி வைத்து டெலிவரி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. ஆண்கள் விடுதி அறையில் அதிர்ச்சி…!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒரு நாள் எல்லோரும் இறந்துதான் ஆக வேண்டும் அதனால்” – டைரியில் உருக்கமாக எழுதி வைத்து டெலிவரி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. ஆண்கள் விடுதி அறையில் அதிர்ச்சி…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியில், கேசவ் வர்மா (30) என்பவர் தங்கி டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், கேசவ் வர்மாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து ஒரு டைரியை காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதில், “ஒரு நாள் அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும்” என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்த வாசகம் இடம்பெற்றிருந்தது.

Advertisement

இந்தத் துயரச் சம்பவத்திற்கான பின்னணி மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்துத் தடயங்களைச் சேகரித்துள்ள காவல்துறையினர், அவரது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in