பள்ளிக்கு ஒரு நிமிடம் லேட்..! திருப்பி அனுப்பப்பட்ட 9 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்… வீட்டு செல்லும் வழியில் நடந்த பயங்கரம்… ஆசிரியர் செய்த செயலால் கொந்தளிக்கும் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பள்ளிக்கு ஒரு நிமிடம் லேட்..! திருப்பி அனுப்பப்பட்ட 9 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்… வீட்டு செல்லும் வழியில் நடந்த பயங்கரம்… ஆசிரியர் செய்த செயலால் கொந்தளிக்கும் பெற்றோர்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில், பள்ளிக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் திருப்பி அனுப்பப்பட்ட 9 வயது சிறுவன் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள கூர்பூர் (Ghoorpur) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற சிறுவனை, ஒரு நிமிடம் தாமதமாக வந்ததாகக் கூறி ஆசிரியர் ஒருவர் பள்ளி வாசலிலேயே தடுத்து நிறுத்தி வீட்டிற்குத் திருப்பி அனுப்பியதாகச் சிறுவனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆசிரியர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, தண்டவாளத்திற்கு அருகே உள்ள பாதை வழியாகச் சிறுவன் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரயில் மோதிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுவனின் உயிரிழப்புச் செய்தி அறிந்து ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிச் சூறையாடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஆவேசத்தில் இருந்த குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு சிறுவனின் உயிர் பறிபோனதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in