LATEST NEWS
“ரூ.5,000 கோடி ‘பேட்ச் ஒர்க்’ ஊழல்..” தவெக அரசின் அடுத்த டார்கெட் அமைச்சர் எ.வ.வேலுவா..? தீப்பற்றும் தமிழக அரசியல்..!!
அடுத்து ‘பேட்ச் ஒர்க்’ ஊழலை தவெக அரசு கையில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் பள்ளங்களைச் சரிசெய்வதற்காக ‘அவசரப் பணிகள்’ என்ற அடிப்படையில் பேட்ச் ஒர்க் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகளில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இணைந்து சுமார் ரூ.5,000 கோடி வரை ஊழல் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் தவெக அரசின் அடுத்த குறி அமைச்சர் எ.வ.வேலு மீதுதான் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
