CRIME
“ரூம் போட்டு யோசிப்பாங்க போல..!” நகை கடைக்காரர் கண் முன்னே கம்மல்களை அபேஸ் செய்த முகமூடிப் பெண்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில், நகைக்கடை ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி முகத்திரை அணிந்த பெண் ஒருவர் நூதன முறையில் கம்மல்களைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோஹாவில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றிற்கு ஆண் ஒருவருடன் வாடிக்கையாளர் போல வந்த அந்தப் பெண், விதவிதமான கம்மல் டிசைன்களைக் காட்டுமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளார். நகைகளைப் பார்ப்பது போலப் பாவனை செய்தவாறே, கடை ஊழியர்களிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்து அவர்களது கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்துள்ளார்.
ஊழியர்களின் கவனம் சற்று திசைதிரும்பிய அந்த நொடியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த கம்மல்களை லாவகமாகத் திருடி மறைத்துக்கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு நகைகள் மாயமானதை அறிந்த கடை உரிமையாளர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகத்திரை அணிந்த அந்தப் பெண் நகைகளைத் திருடும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய அந்தப் பெண்ணையும், அவருடன் வந்த நபரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
