CRIME
“கொஞ்சம் தனியா பேசணும் வா…” திருமண வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்… நள்ளிரவில் போன் செய்து வரவழைத்த மாப்பிள்ளை செய்த கொடூரம்..! பகீர் பின்னணி..!!
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு திருமணத்திற்கு முந்தைய நாள், கர்ப்பிணிப் பெண்ணான தனது காதலியை நிச்சயதார்த்த மாப்பிள்ளை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்து, உடலை வயலில் புதைத்துள்ளார். இந்தச் சோகச் சம்பவம் கிஷன்கஞ்ச் பஹாட்கட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லாபாடி பஞ்சாயத்து கால சிங்கிடியா கிராமத்தில் நடந்துள்ளது. திருமண வீட்டுக் கொண்டாட்டங்கள் நடந்துவந்த சூழலில், திடீரென இளம்பெண் காணாமல் போனதால் குடும்பத்தினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்துப் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில்தான் இந்த பயங்கரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண் கடந்த ஒரு வருடமாக பாசித் ஆலம் என்ற வாலிபருடன் காதலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததும், குற்றவாளி அந்தத் தொடர்பை முறித்துக் கொள்ள விரும்பியுள்ளார். இருப்பினும், பஞ்சாயத்தின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக, இருவருக்கும் நவம்பர் 16-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பஞ்சாயத்து பேசி முடித்த போதிலும், பாசித்தும் அவரது குடும்பத்தினரும் இந்தத் திருமணத்தை ஏற்க விரும்பவில்லை. இதனால் அந்தப் பெண்மணியைக் தீர்த்துக்கட்ட அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
திட்டமிட்டபடி, நவம்பர் 13-ம் தேதி இரவில் அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக வரவழைத்த குற்றவாளி, அவரது துப்பட்டாவைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு, தனது தந்தை மற்றும் சகோதரனுடன் சேர்ந்து உடலை அருகிலுள்ள வயலில் குழி தோண்டி புதைத்துள்ளார். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் கால் விவரங்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து மேற்கு வங்க எல்லை அருகே பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான பாசித்தை கைது செய்தனர். குற்றவாளியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வயலில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், போலீசார் மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.
