CRIME
“இது என்னடா புது ட்ரிக்..” இடுப்பு முதல் மார்பு வரை திருடர்கள் செய்த பகீர் காரியம்.. ஜாக்கெட்டைக் கழற்றியதும் அதிர்ந்து போன செக்யூரிட்டிகள்.. அதிர்ச்சி பின்னணி..!!!
தொழிற்சாலை ஒன்றிலிருந்து செப்புக் கம்பிகளைத் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் கையாண்ட விநோதமான தந்திரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் அந்தக் கேபிள்களின் மீதுள்ள பிளாஸ்டிக் உறைகளை நீக்கிய அவர்கள், உள்ளே இருந்த செப்புக் கம்பிகளைத் தங்களது இடுப்பு முதல் மார்பு வரை உடல் முழுவதும் இறுக்கமாகச் சுற்றிக் கொண்டனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அதன் மேல் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு சாதாரணமாக வெளியே நடந்து செல்ல முயன்றனர்.
ஆனால், அவர்கள் தொழிற்சாலையின் நுழைவாயிலைக் கடக்க முயன்றபோது, அவர்களின் நடை மற்றும் உடல் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட பாதுகாவலர்களுக்கு (Security Guards) சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது, ஜாக்கெட்டிற்குள் சுமார் 49 கிலோ எடையுள்ள செப்புக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
