CRIME
“வா நகையைத் திருப்பித் தருகிறேன்..” என்று ஆசை வார்த்தை கூறி கள்ளகாதலன் செய்த கொடூர செயல்.. கால்வாயில் மிதந்த பெண் சடலம்.. கோவையை அதிரவிட்ட பயங்கர சம்பவம்..!!!
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணை, நகைகளைத் திருப்பித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கால்வாயில் தள்ளிக் கொலை செய்ததாக அவரது கள்ளக்காதலன் கதிரவன் மீது புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே இரண்டு கணவர்கள் பிரிந்து சென்ற நிலையில் மூன்றாவது கணவர் கணேசனுடன் வசித்து வந்த கீதாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த கதிரவனுடன் திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தின் அடிப்படையில் கீதா அவ்வப்போது கதிரவனுக்குத் தங்க நகைகளைக் கொடுத்து உதவிய நிலையில், அந்த நகைகளைத் திருப்பிக் கேட்பது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், தனது நண்பரான சூலூரைச் சேர்ந்த சண்முக வடிவேலுடன் சேர்ந்து கீதாவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, நகைகளைத் திருப்பித் தருவதாகக் கூறி கீதாவை அழைத்துச் சென்ற கதிரவன், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள கிருபாகரன் தென்னந்தோப்பு கால்வாயில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கால்வாயில் கிடந்த கீதாவின் உடலை மீட்ட அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பின்னர் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே இச்சம்பவம் கொலை என்பது காவல்துறையினருக்குத் தெரியவந்தது; இதையடுத்து கதிரவனைப் பிடித்துள்ள போலீசார், இதில் அவரது நண்பர் சண்முக வடிவேலுக்கும் தொடர்புள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
