LATEST NEWS
கள்ளக்குறிச்சிக்கு விரைவில் இடைத்தேர்தல்..? தவெக எம்எல்ஏவு அருள்விக்னேஷுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – தமிழிசை போட்ட பரபரப்பு குண்டு..!!
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் குறித்துத் தனது உரையில் விரிவாகப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஒரு மாவட்டத்தின் உயரதிகாரியான பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பும் அளவிற்குத் துணிச்சல் வந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் மீது தேசிய மகளிர் ஆணையம் கண்டிப்பாகத் தலையிட்டுக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், இந்தச் சர்ச்சையின் தொடர்ச்சியாகவும், எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகளின் எதிரொலியாகவும் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி என தமிழிசை சௌந்தரராஜன் ஆரூடம் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியலில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
