CRIME
பகீர்.. திடீரென மாயமான தாய் மற்றும் 11 மாதப் பெண் குழந்தை.. மறுநாள் அதிகாலையில் சுர்மா நதியில் காத்திருந்த அதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!
வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் ஓடும் சுர்மா நதியில் இருந்து, மாயமான இந்துப் பெண் மஞ்சுஸ்ரீ சக்கரவர்த்தி மற்றும் அவரது 11 மாதப் பெண் குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் தெற்கு சுர்மா பகுதியில் உள்ள சந்திபுல் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்த பிஸ்வாஸ் என்பவரின் மனைவி மஞ்சுஸ்ரீ சக்கரவர்த்தி என்கிற பிரோமி (33) மற்றும் அவர்களது 11 மாதக் குழந்தை ஜோய்ஸ்மிதா பிஸ்வாஸ் ஆகியோர் நேற்று மாலை சுமார் 4:30 மணியளவில் மாயமாகினர். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், தெற்கு சுர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் மாயமான சுமார் 10 மணி நேரத்திற்குப் பிறகு, இன்று அதிகாலை 2:30 மணியளவில் சில்ஹெட் நகரில் உள்ள ஷாஜலால் பாலம் மற்றும் மாச்சிம்பூர் படித்துறை அருகே சுர்மா நதியில் இருவரின் சடலங்களும் மிதப்பதை உள்ளூர் மக்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சில்ஹெட் எம்.ஏ.ஜி. உஸ்மானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்து மக்களின் பாதுகாப்பு குறித்த கடுமையான கவலைகளையும் கேள்விகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது. மேலும், 11 மாதக் குழந்தை தலசீமியா எனும் இரத்தக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
