LATEST NEWS
“வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் இப்படியா..?” பானிபூரி கடையில் அரங்கேறிய மெகா ட்விஸ்ட்.. ரீல்ஸ் எடுத்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. கடைக்காரரிடம் எகிறியத்தால் பரபரப்பு..!!
பானிபூரி சாப்பிட்டுக்கொண்டு ரீல்ஸ் எடுத்த ஆர்வத்தில், நகை மற்றும் பணம் இருந்த கைப்பையைக் கடையிலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்ற பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடை ஒன்றில் பானிபூரி சாப்பிடச் சென்ற பெண் ஒருவர், தான் சாப்பிடுவதை அருகில் இருந்த நபரைக் கொண்டு ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். வீடியோ எடுப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்திய அந்தப் பெண், தனது கைப்பையை அந்தக் கடையிலேயே மறந்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் கடைக்குள் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கே கேட்பாரற்று இருந்த அந்தப் பெண்ணின் கைப்பையை நைசாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அந்தப் பையில் ஒரு சவரன் தங்க நகை மற்றும் 4,000 ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் தனது கைப்பை மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கடைக்காரர்தான் தனது பையைத் திருடிவிட்டதாகக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் குற்றம் சாட்டியுள்ளார். ரீல்ஸ் மோகத்தால் கவனக்குறைவாக இருந்துவிட்டு, இப்போது கடைக்காரர் மீது அப்பெண் பழிபோடும் இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
