CRIME
“மனுஷனா இவன்..?” வாகனத்தின் அடியில் சிக்கிய வாலிபர்.. கார் ஓட்டுநர் செய்த அந்த ஒரு கொடூர காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், அதிவேகமாக வந்த மேக்ஸ் பிக்கப் வாகனம் ஒன்று ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் மீது மோதியதோடு நில்லாமல், அவரைச் சுமார் 500 மீட்டர் தூரத்திற்குச் சாலையில் கொடூரமாக இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் விபத்து அரங்கேறியுள்ளது. விபத்துக்குள்ளான சுபம் என்ற அந்த வாலிபர், பிக்கப் வாகனத்தின் அடியில் சிக்கிய நிலையிலும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அப்படியே சாலையில் வேகமாக இழுத்துச் சென்றுள்ளார். இக்கோர விபத்தில் படுகாயமடைந்த சுபம், அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பயங்கரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வாலிபரான சுபம் பிக்கப் வாகன ஓட்டுநரின் கொடூரச் செயல் குறித்துக் காவல்துறையினரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கான்பூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு வாலிபரை இழுத்துச் சென்று அவரது உயிருக்கு ஆபத்தை விளைவித்த பிக்கப் வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சாலையில் நடந்துள்ள இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
