“காலம் அவருக்குப் பதில் சொல்லும்..” எஸ்.பி.வேலுமணிக்காக களத்தில் இறங்கிய செங்கோட்டையன்.. அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் மோதல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காலம் அவருக்குப் பதில் சொல்லும்..” எஸ்.பி.வேலுமணிக்காக களத்தில் இறங்கிய செங்கோட்டையன்.. அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் மோதல்..!!

Published

on

எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பேசும்போது, “கட்சியில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர்தான்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்திலும், கட்சிக்குள்ளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதில், “கட்சியில் இரண்டு கோடி தொண்டர்கள் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், ஒருவர் முதலமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் உயர்ந்து வருவதற்கு முக்கியப் பொறுப்பாளராக இருந்து உறுதுணையாக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி” என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், “அவர் ஆற்றிய அந்த முக்கியப் பங்களிப்பை எல்லாம் மறந்துவிட்டு தற்போது இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காலம் அவருக்குத் தகுந்த பதில் சொல்லும்” என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in