LATEST NEWS
ஆத்தாடி..! நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலைகள்… நாய்கள் செய்த தரமான சம்பவம்… நிம்மதியில் கிராம மக்கள்…!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பாப்பான்குளம் பகுதியில், நொச்சிப்பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நள்ளிரவில் ஒரு முதலை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மரகதம் என்பவரின் வீட்டின் வாசலுக்குள் முதலை ஊர்ந்து செல்வதைக் கண்டு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்போது, வீட்டில் வளர்க்கப்படும் இரண்டு நாய்கள் முதலையைக் கண்டதும் சற்றும் அஞ்சாமல் ஆக்ரோஷமாகக் குரைத்துக்கொண்டே அதை நோக்கிப் பாய்ந்தன. நாய்களின் கடுமையான எதிர்ப்பையும் கூச்சலையும் எதிர்கொள்ள முடியாமல், அந்த முதலை அங்கிருந்து தப்பியோடி மீண்டும் ஓடைப் பகுதிக்குத் திரும்பியது.
இந்தச் சம்பவம் முழுவதுமே அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நள்ளிரவில் வீட்டிற்குள் வந்த முதலையைத் துணிச்சலாக விரட்டிய நாய்களின் செயலையும், அப்பகுதியில் நிலவிய பரபரப்பான சூழலையும் இந்த விடியோ வெளிப்படுத்துகிறது.
