“தீபமேற்றச் சொன்னால் தவெக அரசுக்கு ஏன் எரிகிறது..?” ஜோசப் விஜய் ஏன் பதறுகிறார்… ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தீபமேற்றச் சொன்னால் தவெக அரசுக்கு ஏன் எரிகிறது..?” ஜோசப் விஜய் ஏன் பதறுகிறார்… ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

Published

on

திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தூணில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தினத்தன்று மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றச் சொன்னால் தவெக அரசுக்கு ஏன் எரிகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தீபத்தூணில் தீபமேற்றச் சொன்னால் தவெக அரசுக்கு ஏன் எரிகிறது என்றும், மஹா கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபமேற்றலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருக்கும் தவெக அரசின் இந்துவிரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஜோசப் விஜய் ஏன் இத்தனை பதறுகிறார் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து பிற அமைப்புகள் அமைதி காக்கும்போது தவெக அரசு மட்டும் எதற்கு முந்திக்கொண்டு மறு ஆய்வு மனு தாக்கல் செய்கிறது என்றும், கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை கந்தர் மலையை ‘சிக்கந்தர்’ மலையாக மாற்றத் துடிக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

தொடர்ந்து, வாக்கு வங்கி அரசியலுக்காக ஜோசப் விஜய் இந்தளவிற்கு தரம் தாழ்ந்து போக வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கூடாது என நீதிமன்றங்களில் தொடர்ந்து மனுத் தாக்கல் செய்து வரும் தவெக அரசு, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் பொதுமக்களின் வரிப்பணம் என்பதை மறந்து விடக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். முருக பக்தர்களின் பணத்தைக் கொண்டே அவர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக வாதிடும் ஜோசப் விஜய்க்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது என்றும், ‘அனைவருக்குமான ஆட்சி’ என்று கூறிக்கொண்டு முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளைத் திட்டமிட்டுப் பறிக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான இந்துவிரோத அரசுக்கு முருக பக்தர்கள் கூடிய விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in